இந்தி சினிமாவில் தங்கம், தாரே ஜாமின் பர், தூம்-3 உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில், அத்விடத் சாண்டன்யையக்கத்தில் உருவாகியுள்ள படம் லால்சிங் சத்தா. இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் அளித்தஒரு பேட்டியில், இந்த நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துள்ளதால், என் மனைவி வேறு நாட்டிற்குச் செல்லலாம் என கூறியதாகத் தெரிவித்திருந்தார். அப்போது இவருக்கும் எதிராக விமர்சனங்களும் கண்டனங்களும் குவிந்தது.
அதனால், அமீரின் லால்சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது.
இந்த நிலையில், அமீர்கான் படங்களில் இந்து கடவுள்கள் அவதிப்பு செய்யப்பட்டுவதாகக் கூறி அவரது லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.