சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘டிராபிக் ராமசாமி’ என்ற படம் உருவாகியுள்ளது. டிராபிக் ராமசாமி வேடத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விக்கி, இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரோகிணி, அம்பிகா, குஷ்பூ, சீமான், இமான் அண்ணாச்சி, ஆர்.கே.சுரேஷ், அம்மு ரவிச்சந்திரன், பிரகாஷ் ராஜ், லிவிங்ஸ்டன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ஜூன் 22ஆம் தேதி, அதாவது அடுத்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.