சென்னையில் இன்றே ரிலீஸாகும் ‘வாரிசு’ திரைப்படம்: நள்ளிரவில் விமர்சனமா?

செவ்வாய், 10 ஜனவரி 2023 (14:29 IST)
விஜய் நடித்த வாரிசு திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் மற்றும் விஐபிகளுக்கான காட்சி இன்று இரவு சென்னையில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள திரை அரங்கில் இன்று பத்திரிக்கையாளர் மற்றும் விஐபி காட்சி நடைபெறும் என்றும் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த காட்சி 11 மணிக்கு முடிந்துவிடும் என்பதால் பெரும்பாலான பத்திரிகைகளில் இன்று இரவே ’வாரிசு’ திரைப்படத்தின் விமர்சனம் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது. 
 
விஜய் படத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகையாளர் காட்சி திரையிடப்படாத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போதுதான் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்