என்னது டிக் டாக் இலக்கியாவும் வரப்போகிறாரா? களைகட்டும் பிக்பாஸ் வீடு!

புதன், 19 ஆகஸ்ட் 2020 (16:41 IST)
டிக்டாக் பிரபலம் இலக்கியாவும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கக் கூடும் எனத் தகவல் பரவ ஆரம்பித்துள்ளது.

டிக்டாக்கில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சியாக உடையணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வாழ்ந்து வந்தவர் டிக் டாக் இலக்கியா. சினிமா ஆசையில் இதுபோல செய்வதாக அவரே பல முறை ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை என்றாலும் டிக்டாக் பிரபலம் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய அவர் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இலக்கியாவும் உள்ளே வந்தால் பிக்பாஸ் வீடு ரணகளம் ஆகும் என ரசிகர்கள் இப்போதே கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்