முதல்முறையாக இணைந்த ஊர்வசி, ராதிகா & குஷ்பு!

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:44 IST)
தெலுங்கு படம் ஒன்றில் தமிழின் முன்னாள் கதாநாயகிகளான ஊர்வசி, ராதிகா மற்றும் குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

சர்வானந்த், ராஷ்மிகா நடிக்கும்  புதிய படமாக 'ஆடவாள்ளு மீகு ஜோஹார்லு' உருவாகி வருகிறது. இந்த படத்தை கிஷோர் திருமலா இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் இப்போது முக்கியமான கதாபாத்திரங்களில் தமிழ் நடிகைகளான ராதிகா, ஊர்வசி மற்றும் குஷ்பு ஆகிய மூன்றுபேரும் நடிக்கிறார்களாம். படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்