விவேகம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதுமே தினமும் 5 மணிநேரம் உடற்பயிற்சி செய்யத் துவங்கியுள்ளார் அஜீத். கார், பைக் ரேஸ்களில் கலந்து கொண்ட அஜீத் விபத்துகளில் சிக்கி காயம் அடைந்து பலமுறை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
படப்பிடிப்பின் போது மோட்டார்சைக்கிளில் சாகசம் செய்தபடியே ஆபத்தான சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கிறார் அஜித். படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை பின்னி மில்ஸில் சில காட்சிகளை படமாக்கி உள்ளார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும், இந்தப்படம் நிச்சயம் பம்பர்ஹிட் என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.