தமிழ் சினிமாவில் 80 களின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர்,
70 களில் ஒப்பனைக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன்பின்னர், நடிகர் விணுசக்கரவர்த்தியால், வண்டிச்சக்கரம் படத்தில் சிலுக்கு என்ற கேரக்டரில் அறிமுகம் செய்தார்.
அதன்புன்னர், மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன், தனிக்காட்டு ராஜா, ரங்கா, மூன்று முகம், பாயும் புலி, கைதி என ரஜினி, கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சில்க் ஸ்மிதா வாழ்கையில் செய்த பெரிய தவறு அவர் காதலிக்கலாம்,.அது தவறில்லை. ஆனால் பெற்றோரை ஒதுக்கி வைக்கக்கூடாது. அவர் தனது தாய் மற்றும் சகோதரரை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஒருத்தரை நம்பி வாழ்ந்தார் என்று கூறினார்.
மேலும், உறவினர்களை அருகில் வைத்திருந்தால், பாதி அவர்கள் சாப்பிட்டாலும், கொஞ்சமாவது வைப்பார்கள்! ரத்த சம்பந்தம் இல்லாதவர்களை உடன் வைத்துக் கொண்டால், அதுவும் உறவினர்கள் ஆதரவில்லை என்று தெரிந்தால் ஏமாற்றுவார்கள். சில்க் ஸ்மிதா இதற்குப் பலியாகிவிட்டதாக தெரிவித்தார்.