‘வீரமே வாகை சூடும்’ படத்தின் தீம் மியூசிக் ரிலீஸ்

புதன், 22 டிசம்பர் 2021 (17:33 IST)
விஷால் டிப்பில்  உருவாகி வரும் வீரமே வாகை சூடும்’ படத்தின் தீம் மியூசிக் தற்போது வெளியாகியுள்ளது.
 
 நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வீரமே வாகை சூடும் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரவணன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ’வீரமே வாகை சூடும்’ படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் தீம் மியூசிக் ஆகிய இரண்டும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வீரமே வாகை சூடும் படத்தின் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்