திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பது அமலுக்கு வந்தது

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (12:48 IST)
இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.

 
இந்த உத்தரவை நேற்றுமுதல் தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகள் அமலுக்கு கொண்டு வந்தன. திரைப்படம் திரையிடுவதற்குமுன் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அதனை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது என திரையங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
 
ஒரு படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்டால் கேளிக்கை வரியை பார்வையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அவமதித்து இன்றும் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட படங்களுக்கும் பார்வையாளர்களிடம் வரி வசூலிக்கும் தேச விரோத செயலை திரையரங்கு உரிமையாளர்கள் நிறுத்தினால், பார்வையாளர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்