புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே ரங்கமுத்து பட்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் அதே ஊரைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தாராம். இந்த காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுப்பிரியாவை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். காதலியை ரகசியமாக பார்க்க சென்ற பார்த்திபன், பெண்ணின் உறவினர்களிடம் சிக்கி கொண்டாராம். இதையடுத்து பார்த்திபனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பார்த்திபன் பெற்றோர் செல்வதுக்கு முன்பாக இருவருக்கும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டனர். அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபனின் பெற்றோர் மகனை தங்களிடம் அனுப்புமாறு கேட்டும் அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. நிலவு 19ஆம் தேதி அங்குள்ள கோவிலில் விஷம் குடித்த நிலையில் பார்த்திபன் மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பார்த்திபன் சிகிச்சை பலனின்றி 22ம்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தங்கள் மகன் சாவுக்கு அனு பிரியாவின் பெற்றோரை காரணமென பார்த்திபனின் பெற்றோர் அளித்த புகாரை ஏற்று அனுப்பிரியாவின் உறவினர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல பார்த்திபனின் இறுதி ஊர்வலத்தின்போது அனுப்பிரியாவின் வீட்டை அடித்து நொறுக்கியதாக பார்த்திபனின் உறவினர்கள் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.