ஆளும் முழு உரிமையை பெற்ற என்.ஆர்.ஐ குடும்பம்; இரண்டான பிக்பாஸ் வீடு

புதன், 30 ஆகஸ்ட் 2017 (11:11 IST)
பிக்பாஸ் வீட்டிற்குள் ஜூலி மற்றும் ஆர்த்தி உள்ளே சென்றதையடுத்து நேற்றைய நிகழ்ச்சியில் ஆடல், பாடல் நிகழ்வுகளுடன்  இனிதே சென்றது. பிக்பாஸ் கட்டளைப்படி, வீட்டிற்குள் இருப்பவர்கள் என்.ஆர்.ஐ குடும்பம், மதுரை குடும்பம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டனர்.

 
அவர்கள் இருவருக்கும் பேஸ்கட் பால் போட்டி நடத்தப்பட்டு, வெற்றியாளராக என்.ஆர்.ஐ குடும்பம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டை ஆளும் முழு உரிமையையும் என்.ஆர்.ஐ குடும்பம் எடுத்துக் கொண்டது. தோற்ற அணியில்  உள்ள உறுப்பினர்கள், தரையில்தான் அமர வேண்டும், படுக்கையறை, சமையல் அறை போன்றவற்றை அனுமதிக்குப் பின்தான்  பயன்படுத்த வேண்டும், கழிவறைக்குச் சென்றால் பாட்டுபாடிக் கொண்டே செல்ல வேண்டும், கலை நிகழ்ச்சிகள் மூலம் வென்ற  அணியை குஷிப்படுத்த வேண்டும் என்பது போன்று பல கொடூரமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
 
அவர்களுக்கு தேவையான உதவிகளையும், வீட்டு வேலைகளையும் மதுரைக் குடும்பம் செய்தது. அவ்வப்போது வெற்றி பெற்ற குடும்பத்தின் விருப்பப்படி, தோல்வியடைந்த குடும்பம் கலகலப்பான நிகழ்வுகளைச் செய்து காண்பித்து என்.ஆர்.ஐ குடும்பத்தை குஷிப்படுத்தி வருகிறது. இவை வரும் நாட்களில் தொடருமா அல்லது பிரச்சனைகள் வெடிக்குமா?
 
என்னதான் விளையாட்டுக்காக டாஸ்க் கொடுக்கப்பட்டாலும், அவை பிறர் மனதை புண்படுத்தும் அளவிற்கு அமைந்துள்ளது  கடுமையான கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்