கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் அமெரிக்காவில் உள்ள அவரது மகள் அனுஹாசன் வீட்டில் மரணம் அடைந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பார்ட்னாராக இருந்து பல படங்களை அவர் தயாரித்திருந்தாலும் அவர் இத்தனை வருட திரையுலக வாழ்க்கையில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இந்த படம் ஒரு முதியோர் இல்லத்தில் வாழும் காதல் ஜோடி குறித்த படமாம். சந்திரஹாசனுக்கு ஜோடியாக நடிகர் விக்ராந்தின் அம்மா இந்த படத்தில் நடித்துள்ளார். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த படத்தின் மீதிக்காட்சிகளை எடுக்க கமல் உதவ வேண்டும் என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளார்களாம். கமலிடம் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்