'அயலான்' திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்

Sinoj

வியாழன், 11 ஜனவரி 2024 (16:35 IST)
அயலான் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மாவீரன் படத்திற்கு பின் உருவாகியுள்ள படம் அயலான்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து,  ரகுல் ப்ரீத் சிங்,யோகி பாபு, இஷா கோபிகர், கருணாகரன், பானுபிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குனர் ரவிகுமார் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.’.

இப்படம்  பொங்கல் பண்டிகையொட்டி வரும் ஜனவரி 12 ஆம் தேதி (நாளை) அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில்,  தங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.1 கோடியை செலுத்தாமல் படம் வெளியான தடை கேட்டு, எம்.எஸ். சேலஞ்ச் என்ற திரைப்பட விளம்பபர நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் சமீபத்தில் அயலான் படத்தை வெளியிட  இடைக்கால தடை விதித்து நீதிபதி  உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அயலான் பட தயாரிப்பு  நிறுவனம் எம்.எஸ்.சேலஞ்ச் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் திரும்ப செலுத்தியது. மீதமுள்ள ரூ.50 லட்சம் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அயலான் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்