ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம்!

Sinoj

வியாழன், 29 பிப்ரவரி 2024 (19:30 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு  வெளியான  திரைப்படம் திரிஷ்யம். 
 
இப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகி அனைத்திலும் வெற்றி பெற்றது.
 
இதையடுத்து 2020 ஆம் ஆண்டு திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெளியாகி நேரடியாக ஓடிடியில் வெளியானது. 
 
இந்த பாகமும் வெற்றி பெற்று தெலுங்கு, கன்னடம் ஆகிய பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் இப்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவதாக முதலில் தகவல் வெளியானது.
 
இப்படத்தை கடந்த ஆண்டு கொரிய மொழியில் இரிமேக் செய்வதற்கான உரிமத்தை மனோரமா ஸ்டுடியோஸ் பெற்ற நிலையில், தற்போது, கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் உடன்  இணைந்து ஹாலிவுட்டிலும் அதனை ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
 
ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்