2018ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ராக்கெட்டரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் நேரடியாகவும் மலையாளம் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்தும் இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.
தற்போது படப்பிடிப்பு லொக்கேசன் பார்ப்பதற்காக ஜியார்ஜியா சென்றுள்ளார் மாதவன். அங்கு தற்போது மைனஸ் 6 டிகிரி என்ற அளவுக்கு கடும் குளிர் நிலவுவதாகவும், ‘ராக்கெட்டரி’ படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இங்கு தான் நடைபெறும் என்றும் மாதவன் கூறியுள்ளார்.