விஜய்க்கு தங்கையாக நடிக்கும் பிரபல ஒளிப்பதிவாளரின் மகள்!

Sinoj

திங்கள், 19 பிப்ரவரி 2024 (17:47 IST)
விஜய்யின் The GOAT படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் G.O.A.T என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தில் இவருடன் இணைந்து 90-ஸ் கிட்ஸின் ஃபேவரெட் நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
 
இப்படத்தை ஏஜிஎஸ்   நிறுவனம் தயாரிக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சிப் பெயரை அறிவித்து, அரசியலில் களமிறங்கிய விஜய், இப்பட ஷூட்டிங்கின்போது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதுகுறித்த வீடியோக்கள் பரவியது.
 
இந்த  நிலையில், The GOAT  படத்தில் விஜய்யின் தங்கையாக பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா நடிக்கிறார் என தகவல் வெளியாகிறது. ஏற்கனவே தங்கச்சி சென்டிமென்ட்டாக விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, வேலாயுதம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படமும் தங்கச்சி சென்டிமென்ட் பாணியிலான படமாக  இருக்குமோ என ரசிகர்களின் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
 
இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்