இணையத்தில் வெளியான பேட்மேன் படத்தின் காட்சிகள்!

திங்கள், 31 ஜனவரி 2022 (16:03 IST)
உலக சூப்பர் மேன் படங்கள் வரிசையில் பேட்மேன் வரிசைக்கு எப்போதும் தனித்த இடமுண்டு.

மற்ற சூப்பர் ஹீரோக்களும் பேட்மேனுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு, மற்ற சூப்பர் ஹீரோக்கள் போல பேட்மேனுக்கு மாயாஜால சக்திகள் எதுவும் இருக்காது. அதனால் பேட்மேனுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. இதுவரை பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கூட்டணியில் பேட்மேன் திரைப்படம் பலமுறை எடுக்கப்பட்டு விட்டது.

இப்போது ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் மேட் ரீவ்ஸ் தி பேட்மேன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இயக்குனர் மேட் ரீவ்ஸ் அந்த காட்சிகளின் ஹெச் டி தரத்திலான காட்சிகளை தானே வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்