நடிகர் ஷாம், அர்ஜுன், மணிஷா கொய்ராலா நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஒரு மெல்லியகோடு. இப்படம் சில எதிர்பாராத காரணங்களால் வெளியாகவில்லை.
"என் எல்லா தருணங்களிலும் உடன் இருக்கும் பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். நான், அர்ஜுன், மணிஷா கொய்ராலா நடித்த ஒரு மெல்லியகோடு படம் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியாவதாக குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. உங்களுக்கு படத்தைத் திரையிட்டும் காட்டினோம். தாமதத்தை முன்னிட்டு விமர்சனம் அப்போதைக்கு எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.