தனி ஒருவன் பார்ட் 2 அறிவிப்பு வெளியாகும் தேதி இதுவா?... லேட்டஸ்ட் தகவல்!

வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:05 IST)
தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. 'ஜெயம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராஜா தொடர்ச்சியாக ரீமேக் படங்களையே இயக்கி, ரீமேக் ராஜா என்ற பெயரை பெற்றார். ஆனால் அந்த கேலிகளை உடைத்து முன்னணி இயக்குனராக அவர் தன்னை மாற்றிக்கொண்டது தனி ஒருவன் படத்தின் மூலம்தான். ஜெயம்ரவியின் சினிமா வாழ்க்கையிலும் அந்தப் படம் முக்கியமானதொரு படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படம் இப்போது வெளியாகி 8 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகிய இருவருமே அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு செய்யும் நாளில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன. தனி ஒருவன் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி, மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்