இதையடுத்து தீர்க்கமான ஒரு முடிவெடுத்துள்ள வெங்கட் பிரபு, ஒருவேளை இப்படத்தின் திரைக்கதை சரியாக வரவில்லை என்றால், வெளியே இருந்து புதிய கதையை வாங்கி விஜய்யை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு விஜய் ஒப்புக்கொள்வாரா? என பயந்து போய் இருக்கிறதாம் படக்குழு. பெரிய ஹீரோவை ஒப்பந்தம் செய்துவிட்டு இப்படியா பொறுப்பில்லாமல் வேலை செய்வது என வெங்கட் பிரபுவை பலர் திட்டித்தீர்த்துள்ளனர். இப்படிதான் அஜித்தின் 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார்.