தள்ளி போகிறதா தளபதி 65...? ரிலீஸ் தேதி இதோ!

வெள்ளி, 28 மே 2021 (16:22 IST)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தளபதி 65'. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்டமான மால் செட் அமைப்பட்ட நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். 
 
மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு  செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் துவங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனவே இப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடவிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. அனேகமாக இந்த படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று சினிமா வட்டாரம் யூகித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்