எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!

ஞாயிறு, 17 ஜனவரி 2021 (13:41 IST)
எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுத்து வரும் தலைவி படக்குழுவினர் எம்ஜிஆர் கேரக்டரின் புதிய ஸ்டைலை வெளியிட்டுள்ளனர்
 
அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதும் அவரது தோற்றம் மற்றும் நடிப்பு அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரவிந்த்சாமி மற்றும் கங்கனா ரனாவத் இணைந்து உள்ள ரொமான்ஸ் ஸ்டில் ஒன்றை தலைவி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்
 
இந்த ஸ்டில்லை நடிகை கங்கனா ரணவத் தனது டுவிட்டரில் வெளியீட்டு புரட்சித் தலைவரின் பிறந்தநாளில் இந்த ஸ்டில்லை வெளியிடுவதில் தான் பெருமைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்