விஜய்க்கும் சூர்யாவுக்கும் ஒரே ஒரு மாசம் தான் இடைவெளி

செவ்வாய், 6 ஜூன் 2017 (00:24 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக், அவருடைய பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரவுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே.  இந்த ஃபர்ஸ்ட்லுக்கை வரவேற்க விஜய் ரசிகர்கள் இப்பொழுது முதலே தயாராகிவிட்டனர்.



 


இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி வெளிவர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. எனவே 'தளபதி 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசருக்கும் இடையே சரியாக ஒரு மாத இடைவெளியே இருக்கின்றது என்பதும் இரண்டுமே அவரவர்களின் பிறந்த நாளில் வெளிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் சூர்யாவின் ரசிகர்களிடம் கலாய்த்தது போதும், விரைவில் டீசர் வெளிவரவுள்ளது என்று தெரிவித்ததன்படி வரும் ஜூலை 23ல் இந்த படத்தின் டீசர்வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்