சூர்யா ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள்

சனி, 6 ஜனவரி 2018 (11:00 IST)
செல்வராகவன் இயக்கும் படத்தில், சூர்யா ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ‘மன்னவன் வந்தானடி’ என இரண்டு படங்களை இயக்கி முடித்துவிட்டு ரிலீஸுக்காகக் காத்திருக்கும் செல்வராகவன், அடுத்ததாக சூர்யாவை இயக்குகிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
சூர்யாவின் 36வது படமான இதற்கு, இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி நடிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதுவரை ரகுல் ப்ரீத்சிங் தான் ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்பட்டு  வந்த நிலையில், சாய் பல்லவியின் பெயர் அறிவிக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
 
ரகுல் ப்ரீத்சிங்கிற்குப் பதிலாகத்தான் சாய் பல்லவி நடிக்கிறார் என்றே அனைவரும் நம்பினர். இந்நிலையில், ரகுல் ப்ரீத்சிங்கும் இந்தப் படத்தில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, சூர்யாவுக்கு ஜோடியாக இரண்டு  ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்