மரக்கட்டை ஸ்டாண்டில் 6 போட்டியாளர்களையும் பிக்பாஸ் நிற்கவைத்து வண்ண விளையாட்டு ஆடச்சொல்லப்பட்டது. அதில் பழுப்பு சிவப்பு கருப்பு வெள்ளை மஞ்சள் ஊதா என பல்வேறு நிறங்களை அடுக்கச்சொன்னார்கள். இதில் ஐஸ்வர்யா, அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தை யாஷிகாவும், 3வது இடத்தை ஜனனியும், 4 வது இடத்தை விஜயலட்சுமியும், 5வது இடத்தை ரித்விகாவும் பிடித்தனர். பாலாஜி புள்ளிகள் ஏதும் வாங்காததால் கடைசி இடத்தையே பிடித்தார்.