இந்நிலையில் சமீபத்தில் வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் சீரியல்களில் நடக்கும் அவலங்களை கூறியுள்ளார். அதாவது , " தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் கேரளா, கர்நாடகா என வேறு மாநில பெண்களுக்கு வாய்ப்பு கோபித்து கொடுக்கிறார்கள். காரணம் வெள்ளையாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே இது பல திறமைவாய்ந்த கலைஞர்களை மனரீதியாக பாதிக்கிறது என்று கூறிய அவர்,
"நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதானே?! நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரியல." என்று ஆக்ரோஷத்துடன் சித்ரா பேட்டியில் தெரிவித்துளளார்.