நடிகைகளே இதுபோன்ற வதந்திகளில் சிக்குகிறார்கள்… தமன்னா ஆதங்கம்!

திங்கள், 13 மார்ச் 2023 (15:09 IST)
தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் அறிமுகம் ஆனாலும், அயன் படத்தின் வெற்றிதான் அவரை கமர்ஷிய நாயகியாக்கியது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் இப்போது அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. பாலிவுட்டில் முகாமிட்டுள்ள அவர் தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப் படுத்தும் விதமாக சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் தமன்னா, அவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ஆனால் இப்போது இந்த தகவலை மறுத்துள்ள தமன்னா “ அவரோடு ஒரு படம்தான் நடித்தேன். அதற்குள் வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள். நடிகர்களை விட நடிகைகளே இந்த திருமண வதந்திகளில் சிக்குகின்றனர். எனக்கு இதுவரை பலமுறை திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். உண்மையில் எனக்கு திருமணம் நடந்தால் இவர் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள் எனத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்