இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஏற்கனவே ஒரு நடிகை நடித்து வந்தாலும் இந்த படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்கும் நடிகை இன்னும் நிரப்பப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி தமன்னா தான் என முடிவு செய்துவிட்டதாகவும் இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டதாகவும், இந்த படத்திற்காக தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் இதுவரை பெறாத மிகப்பெரிய தொகையை தமன்னா பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது
மேலும் இந்த படத்தில் தமன்னாவுக்கு அழுத்தமான கேரக்டர் என்றும் அந்த கேரக்டரின் முழு வடிவத்தையும் கேட்ட பின்னர் தமன்னா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் பொங்கல் முடிந்த உடன் தொடங்க இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பில் அருள்சரவணன் உடன் தமன்னா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே விக்ரம், அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு எஸ்எஸ் மூர்த்தி கலை இயக்குனராக பணி புரிந்து வருகிறார்.