அஜித் பட நாயகிக்கு வாழ்வில் இத்தனை சோகங்களா!!

வெள்ளி, 2 ஜூன் 2017 (11:40 IST)
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழி படங்களிலும் நடித்து வருபவர் நடிகை தபு. இவர் தனது 11 வயது முதலே நடிக்க துவக்கிவிட்டார்.


 

 
இந்நிலையில், தனது வாழ்வில் அவர் சந்தித்த இன்னல்களை பற்றி சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். தபு கூறியதாவது, என் அப்பாவுக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும். ஆனால் நானும், என் அக்காவும் பெண்ணாக பிறந்துவிட்டோம். அப்பா என்னிடம் வெறுப்பை மட்டுமே காட்டினார். அதனால் என்னை நானே வெறுக்கத் துவங்கினேன். 
 
அம்மாவுக்கு என் மீது பாசம் அதிகம். இது என் அக்காவுக்கு பிடிக்காது. அதனால் எப்பொழுது பார்த்தாலும் என்னை அழ வைத்துக் கொண்டே இருப்பாள். இந்த குடும்ப சூழ்நிலையால் நான் பயந்த சுபாவம் உள்ளவள் ஆகிவிட்டேன். என் முதல் படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை என கூறினார் தபு.

வெப்துனியாவைப் படிக்கவும்