டி.ராஜேந்தருக்கு விசா கிடைத்தது...எப்போது அமெரிக்கா பயணம்?

வியாழன், 2 ஜூன் 2022 (23:17 IST)
தமிழ் சினிமாவில் 80 களின் முன்னணி நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்திரன் சமீபத்தில்   நெஞ்சு வலியால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்பு, தன் தந்தை டி. ராஜேந்திரனை மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ஆனால், அவருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஆனது. இந்த நிலையில், இன்று டி,ராஜேந்திரனுக்கு விசா அமெரிக்கா கிடைத்துள்ளதால், அவர் மேல்சிகிச்சைக்காக இரண்டு நாட்களில் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்