சுவாதி கொலை வழக்கு படம் சர்ச்சை ஏற்படுத்த எடுக்கவில்லை: இயக்குநர் விளக்கம்

வெள்ளி, 2 ஜூன் 2017 (11:00 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் படமாக இயக்குகிறார். ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்தற்கு `சுவாதி கொலை வழக்கு' என பெயரிட்டுள்ளனர்.

 
இதனை தொடர்ந்து சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி டிஜிபி-யிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் இறுதி காட்சியில் ராம்குமார் கழுத்தை காவல்துறையினர் அறுப்பது போன்ற காட்சி உள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதற்கு விள்க்கம் அளித்துள்ள இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தை சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கவில்லை என சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.  சுவாதி கொலை வழக்கு என்ற திரைப்படத்தின் மூலமாகக் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை ராம்குமார் குடும்பத்துக்கும், சுவாதி குடும்பத்துக்கும் பங்கிட்டுத்தரப்படுமென இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்