பக்காவா ப்ளான் பண்ணி அடிக்கும் பாக்கியராஜ் அணியினர்! சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்

வெள்ளி, 14 ஜூன் 2019 (14:10 IST)
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் கமல் ஹாசனை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளனர். 
 
நடிகர் சங்கத்துக்கான தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். 
 
இதற்கிடையில் நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர். இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அணியினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு திரட்டினர். ஏற்கனவே விஜயகாந்தை சந்தித்து ஆதரவு திரட்டிய நிலையில் இப்போது கமலை சந்தித்துள்ளனர். 
 
அடுத்து அஜித், விஜய் ஆகியோரையும் சந்தித்து ஆதரவுக் கோர இருக்கிறார்களாம். முதலில் முக்கிய நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் இவர்களின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்