அஜித் குறித்து தவறாக சொல்லிவிட்டேன்: இயக்குனர் சுசீந்திரன்

வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:34 IST)
அஜித் குறித்து நான் கூறியது தவறு தான் என இயக்குனர் சுசீந்திரன் இன்று நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
விஜய் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வீரபாண்டியபுரம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் சுசீந்திரன் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் ஒரு கருத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்திருந்தேன். ஆனால் அது தவறு என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறேன். 
 
அரசியலுக்கு வந்தால் மன நிம்மதியே இருக்காது. ஆனால் தற்போது அஜித் மன நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். எனவே அஜித் அரசியலுக்கு வர வேண்டியதில்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டு உள்ளேன்’ என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார் 
 
வீரபாண்டியபுரம் திரைப்படம் வரும் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்