'சுல்தான்' பட டிரைலரை பாராட்டிய சூர்யா

வியாழன், 25 மார்ச் 2021 (21:06 IST)
சுல்தான் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்  இன்று நடிகர் சூர்யா இப்படத்தின் டிரைலர்  பாராட்டியுள்ளார்.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்.

முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளத நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழகம் முழுவதும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு.சொந்தமாக ரிலீஸ் செய்ய உள்ளார்.

இந்நிலையில் சுல்தான் படத்தின் டிரைலரை நேற்று மாலை படக்குழு வெளியிட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்