இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக திரையரங்குகள் முறையாக செயல்படாத நிலையில் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானதால் ஓடிடி தளங்கள் மக்களிடையே பிரபலமாகி உள்ளன. அதேசமயம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் சென்சார் சான்றிதழ் பெற தேவையில்லை என்ற காரணத்தால் வசை மொழிகள், ஆபாச காட்சிகள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மலையாளப் படமான சுருளி அதிகமான கெட்ட வார்த்தைகளை கொண்டிருந்ததாக தடை செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை படத்தை பார்த்து அனுமதி வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், படத்தை காவல்துறையினர் பார்த்து அனுமதி அளித்துள்ளதால், சுருளி மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.