அகண்டா இயக்குனரோடு பேச்சுவார்த்தையில் சூர்யா?... மொரட்டு மாஸ் படம் ஆன் தி வே !

சனி, 23 செப்டம்பர் 2023 (07:25 IST)
நடிகர் சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்போது சூர்யா பேன் இந்தியா லெவலில் சென்றடைய பல மொழி இயக்குனர்களிடம் கதைக் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக மும்பையில் அதிகமாக தங்கியிருக்கும் சூர்யா, விரைவில் நேரடி பாலிவுட் படமொன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் சிலரை சந்தித்து அவரின் மனைவி ஜோதிகா கதைகேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது தெலுங்கில் சரைனோடு மற்றும் அகண்டா போன்ற மாஸ் மசாலா படங்களை இயக்கிய போயபட்டி சீனு இயக்கத்தில் நடிக்க சூர்யா பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்