சூர்யா தயாரித்து நடிக்கும் இந்தி படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

சனி, 8 ஜூலை 2023 (09:38 IST)
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் சூர்யா ஒரு சிறு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில மாதங்கள் தடைபட்டது. இந்நிலையில் இப்போது படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் மோகன் பாபு நடித்த வேடத்தில் அவர் நடித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

விறுவிறுப்பாக இப்போது நடந்துவரும் ஷூட்டிங்கை அடுத்து இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்