சூர்யா நிராகரித்து மீண்டும் நடித்த படம்… ஆனாலும் அட்டர் பிளாப்!

செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:15 IST)
தமிழ் சினிமாவில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்த கடைசி படமாக அமைந்தது ஜில்லுனு ஒரு காதல்.

சூர்யா ஜோதிகா திருமணத்துக்கு  முன்னதாக அவர்கள் ஜோடியாக நடித்து ரிலீஸான திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். அப்போது அந்த படம் பிளாப் ஆனாலும், அதன் பின்னர் அந்த படத்தின் ரொமான்ஸ் காட்சிகளும், பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆகின.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கிருஷ்ணா, இந்த படத்தின் கதையை சூர்யாவிடம் முதலில் சொன்னபோது அவர் நடிக்க மறுத்தாராம். அதே போல பல ஹீரோக்களும் அந்த கதையை நிராகரித்துள்ளனர். கடைசியாக ஜோதிகா சிபாரிசு செய்ததால் நடித்துள்ளார் சூர்யா. ஆனால் அப்போதும் படம் பிளாப் ஆனது சூர்யா ஜோதிகா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்