சுந்தர் சி இயக்கத்தில் முதல் முறையாக சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம்!

புதன், 16 நவம்பர் 2022 (15:50 IST)
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

அதையடுத்து பேய் படங்களுக்கு கேப் விட்டு பீல்குட் படமாக காபி வித் காதல் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் அடுத்து அவர் ஒரு சயின்ஸ்பிக்‌ஷன் படத்தை இயக்க உள்ளாராம். மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த படத்தின் அடுத்த கட்ட அப்டேட்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்