சொல்றதை விட செய்றது ஈஸி.. செஞ்சுடலாமா! – வருகிறது தளபதி65 பர்ஸ்ட் லுக்

திங்கள், 21 ஜூன் 2021 (11:22 IST)
நாளை நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி65 ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் படம் தளபதி 65. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நாளை விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் தளபதி 65 முக்கிய அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் “நமக்கு சொல்றத விட செய்றதுதான் ரொம்ப ஈஸி! செஞ்சுடலாமா?” என பதிவிட்டு தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தோடு காத்திருப்பில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்