படக்குழுவினர் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம்: ‘புஷ்பா’ இயக்குனர் அறிவிப்பு!

புதன், 29 டிசம்பர் 2021 (10:38 IST)
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
‘புஷ்பா’ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் அதன் முதலீட்டு பணம் வந்து விட்டது என்பதும் அதன் பின் வசூலாகும் பணம் அனைத்துமே தயாரிப்பாளருக்கு லாபம் என்பது குறிப்பிடதக்கது 
 
இந்த நிலையில் புஷ்பா இயக்குனர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்