மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்

செவ்வாய், 3 மார்ச் 2015 (16:21 IST)
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கார்த்தி நடிக்கும் படங்களை மட்டும் தயாரிக்கிற முடிவை மாற்றியிருக்கிறது. அடுத்தடுத்த சறுக்கல்கள் காரணமாக, லாபம் நிச்சயம் என கருதும் படங்களை வாங்கி வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறது.
 
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை சமீபத்தில் வாங்கியது. அடுத்து, மணிரத்னம் இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையையும் வாங்கியுள்ளனர்.
 
தமிழ், மலையாளத்தில் தயாராகியுள்ள இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ளனர். ஏப்ரல் 10 -ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்