தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பரபரப்பான போட்டோகிராபராக இருந்தவர் ஸ்டில்ஸ் ரவி. அந்த காலத்தில் வெளிவரும் நடிகர் நடிகைகளின் போஸ்டர்கள் எல்லாம் இவர் கிளிக்கியதாகவே இருக்கும். இந்நிலையில் இப்போது பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படும் ஷங்கரை இவர்தான் முதன்முதலில் குஞ்சுமோனிடம் அறிமுகம் செய்து வைத்தாராம்.
இதுபற்றி சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் அவர் பேசும் போது ஒரு முறை குஞ்சுமோனிடம் பேச சென்ற போது அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்க போவதாக சொன்னார். நான் அப்போது ஏற்கனவே ஷங்கர் என்னிடம் சொல்லி இருந்த கதை பிடித்திருந்ததால் அதைக் கேட்க சொன்னேன். அதன் பிறகுதான் குஞ்சுமோன் கேட்டுவிட்டு ஜெண்டில்மேன் படத்தை தயாரிக்க முன்வந்தார். அந்த படத்தில் நான் போட்டோகிராபராக வேலை செய்தேன்.
ஆனால் அடுத்த படத்தில் என்னை ஷங்கர் தூக்கிவிட்டார். அதற்கு காரணம் என்ன என்று கூட சொல்லவில்லை. கோபாலா கோபாலா பாடலை ஸ்டில்ஸ் எடுப்பத்ற்காக என்னை அழைத்து சென்ற போது மேனேஜரிடம் நான் என்னப்பா ஸ்பாட்டுக்கு போறதே ஒரு சினிமா மாதிரி இருக்கே எனக் கூறியதை அவர் ஷங்கரிடம் வேறு எப்படியோ மாற்றி சொல்லிவிட்டார் போல. அதுதான் ஷங்கர் என்னை படத்தில் இருந்து தூக்க காரணம் எனக் கூறியுள்ளார்.