‘மனோரதங்கள்’ வெளியீட்டு விழாவில்,நட்சத்திர நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார்!

J.Durai

திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (18:15 IST)
ZEE5,மலையாளத் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும், வரலாற்றுப் படைப்பான  ​​‘மனோரதங்கள்’ தொகுப்பைப் பிரம்மாண்ட விழாவில் வெளியிட்டது.
 
‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும், வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  வசீகரிக்கும் இந்த தொகுப்பின்  ஒரு கதையில்  தோன்றியுள்ள நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் எம்.டி.யின் மகள் அஸ்வதி V  நாயர் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வு, கோலாகலமாக நடைபெற்றது.
 
மனோரதங்கள் படத்தின் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ள வாசுதேவன் நாயர் மகள், அஸ்வதி V நாயர் எம்.டி.யின் கடிதத்தைப் படித்துக்காட்டினார், அதில், வாசுதேவன் நாயர், தன்னுடன் மனோரதங்களில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.
 
கடவுளின் சொந்த நாடான கேரளாவின் பசுமையான பின்னணியில், மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராயும், ஒரு அற்புதமான சினிமாப் பயணமாகும். மதிப்பிற்குரிய எம்.டி அவர்களால் எழுதப்பட்ட கதைகளை ஒருங்கிணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் உட்ச நட்சத்திரங்கள் மற்றும்  திறமைமிகு  இயக்குநர்கள் இந்த படைப்பில் இணைந்து பணியாற்றியுள்ளனர்
 
இது மனித நடத்தையின் முரண்பாடுகளை ஆராய்கிறது, ஆழ்ந்த இரக்கம் மற்றும் அடிப்படை உள்ளுணர்வு ஆகிய இரண்டிற்கும் இடையிலான பதற்றத்தை ஆராய்வதன் மூலம், இந்தத் தொடர் மனிதகுலத்தின் செழுமையான, நுணுக்கமான சித்தரிப்பை வழங்குகிறது, அது உலகளாவிய அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் எதிரொலிக்கிறது. முதன்முறையாக, ZEE5 இல் இந்தியளவில்  புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் குழு ஒன்று சேர்ந்துள்ளது.
 
பத்ம விபூஷன், டாக்டர் கமல்ஹாசன் ஒன்பது அழுத்தமான கதைகளை உள்ளடக்கிய இந்த தொகுப்பை அறிமுகப்படுதுகிறார். 
 
'ஒல்லவும் தீரவும்' (சிற்றலைகள் மற்றும் நதிக்கரை), கதையில் புகழ்பெற்ற மோகன்லால் நடிக்க,  இயக்குநர்  பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்