'பாகுபலி 2' நஷ்டம் அடைந்தால் நான் பொறுப்பு. தைரியமான சொன்ன எஸ்.எஸ்.ராஜமெளலி

வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (23:14 IST)
உலகம் முழுவதும் நேற்று இரவு முதலே 'பாகுபலி 2' ரிலீஸ் ஆக ஆரம்பித்துவிட்ட நிலையில் இன்று மதியம் முதல்தான் தமிழகத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனது. அதுவும் ராஜமெளலி கொடுத்த கியாரண்டியே காரணம்.



 


'பாகுபலி 2' திரைப்படத்தின் தமிழக உரிமை ரூ.47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விநியோகிஸ்தர்கள் செய்த ஒருசில குளறுபடி காரணமாக இந்த படம் இன்று ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் கடைசியாக ரூ.2 கோடி பற்றாக்குறை வரவே, அந்த 2 கோடி ரூபாயை தான் பொறுப்பு ஏற்பதாகவும், ஒருவேளை படம் தோல்வி அடைந்தால் முழு பொறுப்பையும் தான் ஏற்பதாக கொடுத்த வாக்குறுதியை அடுத்து இன்று மதியம் முதல் இந்த படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்