ஆர்.ஆர்.ஆர் மேக்கிங் வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஞாயிறு, 11 ஜூலை 2021 (12:21 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் மற்றும் வியாபாரங்கள் நடந்து வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன
 
இந்த படத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ ஜூலை 15ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாலிவுட் பிரபலங்களான அஜய்தேவ்கான், ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் பிரபலமான ஒலிவியா மோரீஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பென்மூவிஸ் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பின்னர் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்