நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற போது அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் தவரி விழுந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மரணமடைந்தார். இவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குளியல் தொட்டியில் மூழ்கி மூச்சடைத்து இறந்து போனதாக அறிவிக்கப்பட்டு இருந்ததௌ. இந்த மரணம் நடந்து ஓராண்டுக்கு பிறகு இப்போது கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் சர்ச்சையானக் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார், தனது நண்பர் உமாடாதன் எனும் தடவியல் நிபுணர், ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் ’ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்கள் அவரது மரணம் விபத்து அல்ல கொலை என்பதையே வெளிப்படுத்தியதாக உமாடாதன் கூறினார். ஒருவர் எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு அடி தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க வாய்ப்பில்லை. ஆனால் அதேசமயம் யாராவது ஒருவர் அவரது தலையை பிடித்து தண்ணீரில் முழ்கடித்திருந்தால் மட்டுமே உயிரிழக்க முடியும்’ என உமாடாதன் தெரிவித்ததாக டிஜிபி ரிஷிராஜ்சிங் தெரிவித்தார். ஆனால் இவர் கூறிய தடவியல் நிபுண்ரான உமாடாதன் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.