இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெறவுள்ள விழாவில் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், நேற்றிரவு 11 மணிக்கே வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் நேற்று 11 மணியளவில் ஸ்பைடர் பட ட்ரெய்லர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ட்ரெய்லர் 12 மணியளவில் யுடியூபில் வெளியானது.
தற்போதைய நிலவரப்படி தமிழ் ட்ரெய்லர் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், தெலுங்கு ட்ரெய்லர் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் சென்றடைந்துள்ளது. தமிழை விட தெலுங்கு ட்ரெய்லரை மகேஷ் பாபுவின் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.