தனுஷுக்கு வில்லன் என் அப்பா தான்: செளந்தர்யா ரஜினிகாந்த்!!

வியாழன், 6 ஜூலை 2017 (18:07 IST)
தனுஷ், அமலா பால், கஜோல் நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2. இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.


 
 
இந்த படத்தை பற்றிய தகவல் இன்று தற்போது வெளியாகியுள்ளது. விஐபி 2 படத்தில் கஜோல் நடித்துள்ள வில்லி கேரக்டர் தனது தந்தை ரஜினியை மனதில் வைத்துதான் சௌந்தர்யா எழுதினாராம்.
 
முதலில் இந்த படத்தில் ரஜினி, தனுஷ் இருவரையும் நடிக்க வைக்க செளந்தர்யா திட்டமிட்டாராம். பின்னர் சில காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாம்.
 
இதற்கு பின்னர் தான் கஜோலுக்கு ஏற்றார் போல் கதையை மாற்றி எழுதினாராம் செளந்தர்யா. இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியான நிலையில் அடுத்த மாதம் படம் வெளியாகவுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்