நடிகர் ரஜினியின் இரண்டு மகள்களும் சினிமாவில் இயக்குனர்களாக இப்போது இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினியின் இளையமகளான சௌந்தர்யாவிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் நீங்கள் நடிக்க ஆசைப்பட்டால் யாருடன் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் ‘எனக்கு அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடியும். அவருடன் இணைந்து நடிக்க நான் மிகவும் விரும்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.